தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடிய முதல்வர்

24th Dec 2019 11:14 AM

ADVERTISEMENT


சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கான கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி கிறிஸ்துமஸ் பெருநாளையொட்டி சென்னை, கீழ்ப்பாக்கம் நேர்ச்சைத் திருத்தலம், புனித அன்னை தேவாலயத்திற்க்கு சென்று கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுடன் கிறிஸ்துமஸ் பெருநாளை கொண்டாடினார்.

முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினர். மேலும், முதியவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தும், அவர்களுடன் உணவு சாப்பிட்டும் மகிழ்ந்தனர்.
 

ADVERTISEMENT

Tags : christmas
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT