தமிழ்நாடு

பூனைப் படையைப் பார்க்கத் திரண்ட கூட்டம்!

24th Dec 2019 10:56 AM | சினேகலதா

ADVERTISEMENT

 


சனிக்கிழமையன்று இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தை மியாவ் மியாவ் சத்தத்தால் நிரப்பின அங்கு வந்திருந்த 150 பூனைகள்.  இந்தப் பூனைகள் ஸ்டைலாக கூலிங் கிளாஸ் மற்றும் கழுத்துக்கு டை அணிந்திருந்தன.  அவற்றின் முடி பளபளப்பாகவும் மென்மையாகவும் இருந்தது .

8 - 9-வது உலகப் பூனை கூட்டமைப்பு சர்வதேச கிறிஸ்துமஸ் சாம்பியன்ஷிப் பூனைக் கண்காட்சி மற்றும் கோயம்புத்தூர் கேடரி கிளப் (சி.சி.சி) வழங்கும் பூனை பேஷன் ஷோ ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கத்தான்  இந்தப் பூனைக்குட்டிகள் தயாராகி வந்திருந்தன.

உரிமையாளர்களுக்கு பூனைகளைக் காக்கவும் அவற்றின் இனப்பெருக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்தான் இந்த நிகழ்வின் நோக்கம். "நாங்கள் கோயம்புத்தூரிலிருந்து சுமார் 100 பூனைகளை கொண்டு வந்தோம், மற்றவை கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் மற்றும் தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவை" என்று சி.சி.சி தலைவர் பி பிரதாப் கூறினார்.

ADVERTISEMENT

பாரசீகம், பாரசீக லாங்ஹேர், சியாமிஸ், ரஷ்யா, இமயமலை, பிரிட்டிஷ் ஷார்ட்ஹேர், மற்றும் வங்காளம் என வகை வகையான பூனைகள் அரங்கில் அணிவகுத்தன. இவை அனைத்தும் இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்தும் வளர்க்கப்பட்டவை. இந்த இரண்டு நாள் நிகழ்வில், பூனைகளின் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு அழகான ஆடைகள், ஆடம்பரமான ரிப்பன்கள் மற்றும் காலர்களை அணிவித்து அலங்கரித்திருந்தனர். இந்தக் கண்காட்சியைக் காண மக்கள் திரண்டு வந்து பூனைகளை ரசித்னர்.

நிகழ்ச்சி நடைபெற்ற போது பூனைகள் கூண்டுகளுக்குள் வைக்கப்பட்டன, நீதிபதிகள் அவற்றை பரிசோதித்தபடி நடந்து சென்றனர். ஒவ்வொரு இனத்திலும் சிறந்த ஆண் மற்றும் பெண் பூனை, குட்டி, ஸ்பெய்ட், மற்றும் வயதான பூனைகள் எனத் தனித்தனி பிரிவுகளில் மதிப்பிடப்பட்டது. "சிறந்த இனம், அழகிய தோற்றம், அசத்தலான தோரணை மற்றும் ஆரோக்கியமான பராமரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் பரிசுக்கான பூனை தேர்ந்தெடுக்கப்படும்" என்று இந்நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

பூனை பேஷன் ஷோவில் பங்கேற்ற கோயம்புத்தூரைச் சேர்ந்த சையத் இப்ராஹிம் என்பவர் கூறியது, “என்னிடம் ஐந்து பூனைகள் உள்ளன. என் பூனைகளை மேடையில் ஏற்றி அழகு பார்க்க விரும்பினேன். என் செல்லங்களுக்குத் தரமான சர்வதேச உணவை அளிக்கிறேன். தவறாமல் ப்ரீட் செய்து, நன்கு பராமரித்து வளர்த்து வருகிறேன். பயணம் செய்யும்போது பாதுகாப்பாக கூண்டைப் பயன்படுத்துகிறேன்.’ என்றார்.

Tags : CBE Cat show
ADVERTISEMENT
ADVERTISEMENT