திருச்சி : ஸ்ரீரங்கநாத ஸ்வாமி கோவில் சிலைத் திருட்டு வழக்கில், ஶ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், அர்ச்சகர்கள் முரளி பட்டர், நந்து பட்டர், சுந்தர் பட்டர் மற்றும் ஸ்தபதிகள் ஸ்வாமிநாதன், முத்தையா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர் 2017ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி அன்பு தலைமையில் 30க்கு மேற்பட்ட அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஸ்ரீரங்கம் கோவிலில் வழக்கு பதியப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.