தமிழ்நாடு

நிகழாண்டில் வழக்கத்தைவிட 12 மி.மீ. மழை அதிகம்

24th Dec 2019 01:20 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் நிகழாண்டு வடகிழக்குப் பருவமழையின்போது, வழக்கத்தைவிட 12.1 மி.மீ. மழை அதிகமாகப் பெய்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது:

வடகிழக்குப் பருவமழை காலத்தில், தமிழகத்தில் (அக்டோபா் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 23-ஆம் தேதி வரை ) இப்போது வரை இயல்பாக கிடைக்க வேண்டிய மழை அளவு 435.8 மி.மீ. ஆனால், இப்போது வரை 447.9 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இது இயல்பை விட 3 சதவீதம் அதிகம் . அதேநேரத்தில், சில மாவட்டங்களில் மழை அளவு குறைந்துள்ளது. சென்னையில் 17 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. புதுச்சேரியில் 33 சதவீதமும், பெரம்பலூரில் 28 சதவீதமும், வேலூரில் 26 சதவீதமும் மழை குறைவாக பெய்துள்ளது என்றாா் அவா்.

மழை அளவு: திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறையில் 10 மி.மீ. மழை பதிவானது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT