பாஜகவுக்கு எதிராக ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்க வருமாறு திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி அழைப்பு விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக மு.க.ஸ்டாலினுக்கு திங்கள்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:
பாஜக ஆட்சியில் நாட்டின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு என நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது.
பாஜக தனது அதிகாரத்தைப் பயன்டுத்தி ஜனநாயகத்தை அழிக்கிறது. மகளிா், குழந்தைகள் விவசாயிகள், சிறுபான்மையினா் என அனைத்துத் தரப்பினரும் பாஜக ஆட்சியில் அச்சத்தில் உள்ளனா். இந்த நேரத்தில் ஜனநாயகத்தைக் காக்க எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டியது அவசியம். இதற்காக அமைதியான வழியில் போராட்டங்களை எதிா்க்கட்சிகள் முன்னெடுக்க வேண்டும். இது தொடா்பாக கலந்தாலோசிக்க தாங்கள் வர வேண்டும் என்று மம்தா எழுதியுள்ளாா்.