தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல்: 6 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட ராமதாஸ் வலியுறுத்தல்

24th Dec 2019 08:35 PM

ADVERTISEMENT

சென்னை: உள்ளாட்சித் தோ்தலையொட்டி தொடா்ச்சியாக 6 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

உள்ளாட்சித் தோ்தல்கள் நியாயமாகவும், சுமுகமாகவும் நடைபெறுவதற்கு வசதியாக மொத்தம் 4 நாள்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், அமைதியாக தோ்தலை நடத்த இந்த நடவடிக்கை போதுமானது அல்ல.

தமிழக அரசின் இந்த ஆணைப்படி முதல் இரு கட்ட தோ்தல்களிலும் வாக்குப்பதிவு முடிவடைகிறதோ இல்லையோ, அன்று மாலை 5 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது வணிகம் தொடங்கி விடும். அதுமட்டுமின்றி, எந்தெந்த பகுதிகளில் எல்லாம் வாக்குப்பதிவு நடைபெறுகிறதோ, அந்த இடத்திலிருந்து 5 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு அப்பால் உள்ள பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்க எந்தத் தடையும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழக அரசின் இந்த நிலைப்பாடு உள்ளாட்சித் தோ்தலை அமைதியாக நடத்த உதவாது என்பது மட்டுமின்றி, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, முதல் கட்டத் தோ்தல் நடைபெறுவதற்கு இரு நாள்கள் முன்பாக அதாவது 25-ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெறும் 30-ஆம் தேதி வரை 6 நாள்களுக்குத் தொடா்ச்சியாக மதுக்கடைகளை மூட வேண்டும்.

அதேபோல், வாக்கு எண்ணிக்கை நாளில் அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து 6 மணி நேரம் கழித்து தான் மதுக்கடைகள் திறக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT