அரையாண்டு விடுமுறை முடிந்து தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் ஜனவரி 2ம் தேதிக்குப் பதிலாக ஜனவரி 3ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறும் நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெற உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறுவதால், அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜனவரி 3ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.