தமிழ்நாடு

ஜார்க்கண்ட்டில் ஆட்சியைப் பிடிக்கும் காங்கிரஸ் கூட்டணி: மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

23rd Dec 2019 07:50 PM

ADVERTISEMENT


ஜார்க்கண்ட்டில் ஆட்சியமைக்கவுள்ள காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (திங்கள்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜெஎம்எம்), காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணி 47 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

எனவே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழக்கிறது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்தப் பதிவில் அவர் தெரிவிக்கையில்,

ADVERTISEMENT

"ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையில் புதிதாக அமையவுள்ள அரசுக்கு வாழ்த்துகள். முதல்வர் ஹேமந்த் சோரனின் தலைமையில் மாநிலம் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியடைய வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT