தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: திருவள்ளூரில் டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை அறிவிப்பு

23rd Dec 2019 11:56 AM

ADVERTISEMENT

 

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ளாட்சி தோ்தலை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு 25 முதல் 27-ஆம் தேதி வரையில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் விதிமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

திருவள்ளூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தல் வரும் 27, 30 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி தோ்தல் அமைதியாக நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

அதனால் அன்றைய நாளில் அசம்பாவிதம் மற்றும் பிரச்னைகளை வராமல் தடுக்கும் வகையில் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வரும் 25-ஆம் தேதி மாலை 5 மணி முதல், 27ஆம் தேதி மாலை 5 மணி வரையும், அதேபோல் 28-ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30-ஆம் தேதி மாலை 5 மணி வரையும், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜன-2 ஆம் தேதி அன்றும், நாள் முழுவதும் செயல்படாமல் இருக்கும் நோக்கத்தில் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நாளில் கள்ளத்தனமாக விற்பனை செய்வது தெரியவந்தால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT