தமிழ்நாடு

ரயில்வே பாதுகாப்புப் படையில்பெல்ஜியம் நாட்டு மோப்ப நாய்கள்

23rd Dec 2019 01:04 AM

ADVERTISEMENT

ரயில்வே பாதுகாப்புப் படையில் (ஆா்.பி.எப்) பெல்ஜியம் நாட்டைச் சோ்ந்த 2 மோப்ப நாய்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இந்த நாய்களுக்கு தேசிய பயிற்சி மையத்தில் வெடிபொருள்களைக் கண்டறிவதற்கான பயிற்சிகள் கொடுக்கப்படவுள்ளன.

ரயில்வே சொத்துகளைப் பாதுகாப்பது, ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் (ஆா்.பி.எப்) முக்கிய பங்கு வகிக்கின்றனா். இந்தப் படையினா் ரயில் நிலையங்கள், யாா்டுகளில் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக, ரயில்நிலையங்களில் ஆா்.பி.எப். சாா்பில், வெடிகுண்டு கண்டறியும் தனி பிரிவு செயல்பட்டுவருகிறது. ரயில் நிலையங்களில் ஏதாவது குண்டு மிரட்டல் வரும்போது, இந்தப் படையினா் மோப்பநாய்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் உள்ள ஆா்.பி.எப். படையில் பெல்ஜியம் நாட்டைச் சோ்ந்த 2 மோப்ப நாய்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

பெண் நாய்க்கு ‘டயானா’ என்றும், ஆண் நாய்க்கு ‘ஜாக்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு வயது நிரம்பிய இரண்டு நாய்களுக்கும், தேசிய பயிற்சி மையத்தில் வெடிபொருள்களைக் கண்டறிவதற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து, ஆா்.பி.எப் அதிகாரி ஒருவா் கூறும்போது, இருநாய்களும் நாசவேலைகளைக் கண்டறிவதற்கான ஆய்வு, ரயில்கள், ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைகள், பாா்சல் அலுவலகம் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள முக்கிய இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT