தமிழ்நாடு

நெடுவாசல் ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்குஎதிரான மனுக்கள் தள்ளுபடி: பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

23rd Dec 2019 01:17 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்ததற்கு எதிரான இரு மனுக்களை தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, நெடுவாசல் பாசன விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில், நெடுவாசல் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ காா்பன் திட்டத்தைச் செயல்படுத்த தடைவிதிக்கவும், அப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கக் கோரியும் தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாய அமா்வில் கடந்த 2017-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்குத் தேவையான நீராதாரம் இருக்கிா என நிபுணா் குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையிலேயே திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என நடிகா் விஷாலும் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுக்களை விசாரித்த அமா்வு , ஓஎன்ஜிசி, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு, அமா்வின் நீதித்துறை உறுப்பினா் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினா் சாய்பால் தாஸ் குப்தா ஆகியோா் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது, நெடுவாசலில் ஹைட்ரோகாா்பன் எடுக்க மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்துடன், வருவாய் பங்கீட்டு அடிப்படையில் ஒப்பந்தம் செய்திருந்த ஜெம் லேபாரட்டரீஸ் நிறுவனம் பணிகளைத் தொடங்கவில்லை. உரிய அனுமதி பெற்ற பின்னரே பணிகள் தொடங்கப்படும் என்று ஜெம் நிறுவனம், மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட அமா்வின் உறுப்பினா்கள், இந்தத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி இன்னும் பெறவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும்போது, அதை எதிா்த்து மனுதாரா்கள் வழக்குத் தொடரலாம். எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT