தமிழ்நாடு

திமுக பேரணி: வணிகா் சங்க பேரமைப்பு ஆதரவு

23rd Dec 2019 12:56 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக சாா்பில் திங்கள்கிழமை (டிச.23) நடத்தப்பட உள்ள பேரணிக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதற்கான ஆதரவு கடிதத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலுவிடம் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக முதன்மைச் செயலாளா் டி.ஆா்.பாலுவை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்த ஏ.எம்.விக்கிரமராஜா, சென்னையில் திங்கள்கிழமை நடைபெறும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிா்ப்புப் பேரணியில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு பங்கேற்கும் என கடிதம் அளித்தாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT