தமிழ்நாடு

தமிழகத்துக்கு அள்ளிக் கொடுத்த வடகிழக்குப் பருவமழை: வானிலை மையம்

23rd Dec 2019 01:06 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்துக்கு இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை இயல்பான அளவை விட அதிகமாகவே அள்ளிக் கொடுத்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அக்டோபர் 1ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை காலத்தில் இன்று வரை தமிழகத்துக்கு 3 விழுக்காடு மழை அதிகமாக பெய்திருப்பதாகத் தெரிவித்தார்.

அதாவது, தமிழகத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழை அளவு என்பது 44 செ.மீ. என்ற நிலையில், இன்று வரை 45 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 3 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையைப் பொருத்தவரை வடகிழக்குப் பருவ மழையானது 17% குறைவாகப் பெய்துள்ளது. எனினும், இதுவும் இயல்பான அளவாகவேப் பார்க்கப்படுகிறது. ஒருவேளை 19% அளவுக்குக் குறைவாக பெய்திருந்தால், சென்னையில் மழை பற்றாக்குறையாக பெய்திருப்பதாகக் கருத்தில் கொள்ளப்படும்.

ADVERTISEMENT

மழை குறைவாக பெய்த மாவட்டங்களின் பட்டியலில்  புதுச்சேரி - 37%, பெரம்பலூர் 28%, வேலூர் - 26% ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT