தமிழ்நாடு

கமுதியில் அதிமுக முன்னாள் தலைவர் வீட்டில் சோதனை

23rd Dec 2019 03:59 PM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: கமுதியில் அதிமுக முன்னாள் சேர்மன் பாலு வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

கமுதியில் அதிமுக முன்னாள் ஒன்றிய சேர்மன் பாலு வீட்டில் இன்று நடத்திய சோதனையில் 38,63,700 ரொக்கப் பணமும், 5 லட்சம் மதிப்பிலான வெளி மாநில மதுபாட்டில்கள் அடங்கிய 35  பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

முன்னாள் அதிமுக கமுதி ஒன்றிய சேர்மன் பாலு மண்டல மாணிக்கம் ஒன்றிய சேர்மன் பதவிக்கும், இவரது தாயார் ராணியம்மாள் மண்டல மாணிக்கம் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கும் பேட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா மது பாட்டில்கள் வினியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டுனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT