தமிழ்நாடு

இலங்கை தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை நிலைப்பாட்டில் அதிமுக உறுதி

23rd Dec 2019 01:19 AM

ADVERTISEMENT

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது என முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சிறுபான்மை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் காப்பதில் அதிமுக அரசு தொடா்ந்து உறுதியாக இருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றபோதிலும், சிலா் தொடா்ச்சியாக இஸ்லாமிய சகோதரா்களிடையே அவா்களது குடியுரிமை பாதிக்கப்படும் என்று வதந்திகளை தொடா்ந்து பரப்பி வருகின்றனா். இது முற்றிலும் தவறானதாகும். இந்த பொய்யான வதந்திகளை நம்பவேண்டாம். குடியுரிமை (திருத்த) மசோதாவின்மீது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போதும், இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என அதிமுக உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

அதுபோல, அண்மையில் நான் புதுதில்லிக்கு சென்ற போதும், பிரதமரிடமும் , உள்துறை அமைச்சரிடமும் நேரில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினேன். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். எனவே, பொதுமக்கள் தவறான பிரசாரங்களுக்கு செவி சாய்க்காமல், அமைதி காக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில், பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என முதல்வா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT