தமிழ்நாடு

குடியுரிமை திருத்தச் சட்டம்: புதுச்சேரி பல்கலை. மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்!

16th Dec 2019 01:56 PM

ADVERTISEMENT

 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டத்தில் ஈடுபட்ட தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்தும், புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

ADVERTISEMENT

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேரணியாக சென்று வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கி அருகே முற்றுகைப்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டதால் பல்கலைக்கழகத்தில் பரப்பு ஏற்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்த மாணவர்கள் பட்டமளிப்பு விழாவிற்கு குடியரசுத்தலைவர் வருகை தரும்போதும் தங்கள் எதிர்ப்பைபதிவு செய்வோம் என்றும் குறிப்பிட்டனர்

Tags : CAB குடியுரிமை சட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT