தமிழ்நாடு

'திமுக கார்ப்பரேட் நிறுவனமாக மாறிவிட்டது' - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

16th Dec 2019 05:26 PM

ADVERTISEMENT

 

தமிழக அரசியலில் அதிமுகவை மிஞ்சும் அளவிற்கு எந்தக் கட்சிகளும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 'தமிழக அரசியலில் அதிமுகவை மிஞ்சும் அளவிற்கு எந்தக் கட்சிகளும் இல்லை. இனி வரும் கட்சிகளாலும் அதிமுகவை மிஞ்ச முடியாது' என்றார். 

மேலும், 'திமுக கார்ப்பரேட் நிறுவனமாக மாறிவிட்டது. அந்த கட்சியினர் பிரசாந்த் கிஷோரைத்தான் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியது போல, அரசியல் ரீதியாக கருத்து சொல்வதற்கான பக்குவமும், தைரியமும் திமுகவிற்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இல்லை' என்று கூறினார். 

ADVERTISEMENT

அதேபோன்று, ரஜினி கட்சி ஆரம்பிப்பது கடினம்தான் என்றும் அவரது நடவடிக்கை சந்தேகமாகவே உள்ளது என்றும் தெரிவித்தார். 

Tags : அமைச்சர் ஜெயக்குமார்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT