தமிழ்நாடு

மாநிலத் தேர்தல் ஆணையருக்கு எதிராக திமுக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு

16th Dec 2019 04:18 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமிக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்ட கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து, தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த தீர்ப்பில்  2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறும், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மறுவரையை முடித்து 3 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

அதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி திமுக தரப்பில் மற்றொரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு வெள்ளியன்று விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மீண்டும் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமிக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இடஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படவில்லை என்று திமுக தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT