தமிழ்நாடு

டிச. 16: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

16th Dec 2019 07:54 AM

ADVERTISEMENT

 

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை குறைந்தும் மற்றும் டீசல் விலை மாற்றமின்றியும் திங்கள்கிழமை விற்பனையாகிறது.

சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 5 காசுகள் குறைந்து ரூ. 77.65 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் மாற்றமின்றி ரூ. 69.81 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT

பெட்ரோல் விலை 2-ஆவது நாளாக தொடர்ந்து குறைந்தும், 8-வது நாளாக தொடர்ந்து டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது.

Tags : chennai petrol diesel price
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT