தமிழ்நாடு

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சகோதரன் -  சகோதரி மீட்பு

16th Dec 2019 03:55 PM

ADVERTISEMENT

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற சகோதரன் -  சகோதரி மீட்கப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்த கோபால் மகன் சுப்ரமணியன். இவருக்கு சொந்தமான நிலத்தில் 10 சென்ட் அளவிலான நிலத்தை, பக்கத்தில் உள்ள அதே பகுதியை சேர்ந்த விவசாயி சரவணன் என்பவர் முறைகேடாக பட்டா மாற்றம் செய்து விட்டதாகவும், இதனை பட்டா மாற்றி நடவடிக்கை எடுக்கும்படி, செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். 

இதனால் விரக்தியடைந்த சுப்பிரமணி அவரது தங்கை தேவி ஆகியோர் திங்கட்கிழமை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்க வந்த போது, திடீரென இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். 

இதனையடுத்து அங்கிருந்த விழுப்புரம் தாலுகா போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் எச்சரிக்கப்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT