தமிழ்நாடு

மூவருக்கு கண்டசாலா புரஸ்கார்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை வழங்கினார்

16th Dec 2019 03:20 AM

ADVERTISEMENT

திரைப்பட பின்னணிப் பாடகர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் பிறந்த நாளையொட்டி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன், பரதக் கலைஞர் கே.கல்யாணசுந்தரம், சிதார் கலைஞர் பண்டிட் மிட்டா ஜனார்த்தன் ஆகியோருக்கு கலா பிரதர்ஷினி கண்டசாலா புரஸ்காரை ( விருது) தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வழங்கினார்.
 உலக தெலுங்கு கூட்டமைப்பு, கலா பிரதர்ஷினி கலை, கலாசார மையம் ஆகியவற்றின் சார்பில், கண்டசாலாவின் 97}ஆவது பிறந்த நாள் விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு, உலக தெலுங்கு கூட்டமைப்பின் தலைவர் வி.எல்.இந்திரா தத் தலைமை வகித்தார். ஏ.வி.குழும நிறுவனங்களின் தலைவர் ஏ.வி.வரதராஜன், உலக தெலுங்கு கூட்டமைப்பு கோவை கிளையின் தலைவர் ரமா விஜயகுமார், துணைத் தலைவர் கே.கிருஷ்ணகோபால், கலா பிரதர்ஷினியின் நிர்வாக அறங்காவலரும், கலை இயக்குநருமான பார்வதி ரவி கண்டசாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 விழாவில், சிறப்பு விருந்தினராக தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன், பரதக் கலைஞர் கே.கல்யாணசுந்தரம், சிதார் கலைஞர் பண்டிட் மிட்டா ஜனார்த்தன் ஆகியோருக்கு கலா பிரதர்ஷினி கண்டசாலா புரஸ்கார் வழங்கினார்.
 நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கண்டசாலாவின் இசையை இறைவன் முழுமையாக ஏற்றுக் கொண்டார். அதனால்தான் அவரால் ஏழுமலையானுக்கும் தனது பாடலைச் சமர்ப்பிக்க முடிந்தது. 30 முறை ஆந்திரத்தில் சிறந்த பாடகர் விருதைப் பெற்றவர் என்ற கண்டசாலாவின் வரலாறு வியக்க வைக்கிறது.
 தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழ், கர்நாடகம், மராத்தியிலும் பல பாடல்களைப் பாடியுள்ள கண்டசாலாவின் 100 }ஆவது பிறந்த நாளை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என்றார்.
 இதைத் தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன் ஏற்புரை நிகழ்த்தினார். பரதக் கலைஞர்களான பார்வதி ரவி கண்டசாலா, கவிதா ராமு, லாவண்யா சங்கர் ஆகியோர் கண்டசாலாவின் பாடல்களுக்கு நடனமாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT