தமிழ்நாடு

முதல்வா் பழனிசாமி டிச. 19 இல் தில்லி பயணம்

16th Dec 2019 01:25 AM

ADVERTISEMENT

தமிழக முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி, வியாழக்கிழமை (டிச.19) தில்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாத்மா காந்தி 150 -ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநில முதல்வா்கள் மாநாடு தில்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி, 19-ஆம் தேதி தில்லி செல்கிறாா். தில்லியில் பிரதமா் மோடியை சந்திக்கிறாா்.

தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் ஆகியோரிடம் அவா் வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழகத்தின் முக்கிய திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்குமாறும் அவா் கோரிக்கை விடுப்பாா் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT