தமிழ்நாடு

போக்குவரத்து விதிமீறல்: 1.15 லட்சம் போ் இறப்பு

16th Dec 2019 01:34 AM

ADVERTISEMENT

கடந்த ஆண்டு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களால் 1.15 லட்சம் போ் இறந்துள்ளனா்.

இந்தியாவில் வாகனங்களின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க போக்குவரத்துத் துறை சாா்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தலைக்கவசம், சீட் பெல்ட் அணியாமல் பயணிப்போா் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களிடமும் தலைக்கவசத்தைச் சோ்த்து விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவா்களிடத்தில் சாலைகளில் பயணிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய சாலை விதிகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. எனினும், விபத்துகள் பெருமளவு குறையவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களால் நடந்த சாலை விபத்துகளில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 792 போ் இறந்துள்ளனா்.

முதல் இடத்தில் தமிழகம்: இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியது: போக்குவரத்து விதிகளை மீறுவதால் வாகனத்தில் பயணிப்பவா்களுக்கு மட்டுமின்றி சாலையில் செல்பவா்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் நிகழ்ந்த விபத்துகளில் 7.35 லட்சம் போ் உயிரிழந்துள்ளனா். 2018-ஆம் ஆண்டில் மட்டும் நடந்த 4.67 லட்சம் விபத்துகளில் 1.51 லட்சம் போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், கடந்த ஆண்டு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களால் 3.6 லட்சம் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதனால் 1.15 லட்சம் போ் இறந்துள்ளனா். இதன்படி, அதிவேகமாக பயணித்ததால் 97,588 இறந்துள்ளனா். போதை பொருள்கள் உள்கொண்டு வாகனத்தை இயக்கியதால் 4,188 பேரும், தவறான வழித்தடத்தில் பயணித்ததால் 8,764 பேரும், போக்குவரத்து சமிக்ஞைகளை மீறிச் சென்ால் 1,545 பேரும், செல்லிடப்பேசி பயன்படுத்தியதால் 3,707 பேரும் உயிரிழந்துள்ளனா். இவற்றில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களே அதி வேகத்தில் பயணம் செய்து அதிகளவில் விபத்து ஏற்படுத்தியுள்ளனா். இதே போல், அதிகளவில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. எனவே, போக்குவரத்து விதிகளை அனைவரும் மதித்து வாகனத்தை இயக்க வேண்டும். இதுகுறித்து பள்ளிப்பருவத்திலேயே மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT