தமிழ்நாடு

பெரியமருதுபாண்டியரின் 271-ஆவது பிறந்தநாள் விழா

16th Dec 2019 03:18 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மன்னர் பெரியமருதுவின் 271-ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப்பட்டது.
 சிவகங்கைச் சீமையை ஆண்ட மாமன்னர்கள் சின்னமருது, பெரியமருது ஆகியோர் வெள்ளையர்களை எதிர்த்து வெளியிட்ட முதல் சுதந்திர போர்ப்பிரகடனத்தின் மூலம் நாட்டு மக்களிடையே சுதந்திர வேட்கையை ஊட்டினர். இதன் காரணமாக அவர்கள் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
 இதில், பெரியமருதுவின் 271} ஆவது பிறந்தநாள் விழா திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் கொண்டாடப்பட்டது. அங்கு அமைந்துள்ள மருதுபாண்டியர்களின் சிலைக்கு பால், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. அனைவருக்கும் இனிப்பு வழங்கபட்டது.
 இவ்விழாவில், அகமுடையார் சங்கத் தலைவர் ராஜசேகர், துணைத் தலைவர் என்.பி.சுப்பிரமணியன், பூக்கடை பாண்டியன் மருதுபாண்டியன், பார்த்திபன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT