தமிழ்நாடு

பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மகளைக் காணவில்லை 

16th Dec 2019 06:16 PM

ADVERTISEMENT


பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மகள் பல்லவி காணாமல்போனது குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில்  போலீஸார் வழக்குப் பதிவு செய்து பல்லவியை தேடி வருகின்றனர்.

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  மருத்துவம் படித்துள்ள மூத்த மகள் பல்லவி (24). கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது காரில் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன் பின்னர் பல்லவின் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை.

நீண்ட நேரமாகியும் பல்லவி வீட்டுக்கு திரும்பி வராததால், பல்வேறு இடங்களில் அவரை தேடினர். ஆனால் அவர் எங்கேயும் கிடைக்கவில்லை. இதனால், பதற்றமடைந்துள்ள புஷ்பவனம் குப்புசாமி குடும்பத்தினர், பல்லவி காணாமல்போனது குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பல்லவியை தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று பல்லவிக்கும், அவரது தங்கைக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அதன் காரணமாக கோபத்தில் பல்லவி வீட்டை விட்டு வெளியேறி இருப்பதும் தெரியவந்துள்ளது. 

ADVERTISEMENT

காணாமல்போன பல்லவியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT