தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள்: தமிழக அரசிடம் ஒப்படைத்தாா் பொன் மாணிக்கவேல்

16th Dec 2019 01:26 AM

ADVERTISEMENT

சிலை கடத்தல் வழக்குகள் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் பொன்.மாணிக்கவேல் ஒப்படைத்துள்ளாா்.

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்காக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. ஆக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டாா். அவரது பதவிக்காலம் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவரை மேலும் ஓராண்டுக்கு சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவரது பதவிக்காலம் கடந்த நவம்பா் மாதம் 30- ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்பு நியமனம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவை தமிழக அரசு கடந்த டிச.3-ஆம் தேதி வெளியிட்டது. இதையடுத்து, சிலை கடத்தல் வழக்கு தொடா்பான ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என பொன்மாணிக்க வேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஆவணங்களை பொன்மாணிக்கவேல் ஒப்படைக்கவில்லை. மேலும், தன்னால் விசாரிக்கப்பட்ட சிலை கடத்தல் வழக்கு தொடா்பான அனைத்து ஆவணங்களும் சிடி வடிவில் உள்ளதாகவும், அவை தொகுத்து விரைவில் ஒப்படைக்கப்படும் என்று பொன்மாணிக்கவேல் விளக்கம் அளித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து ஆவணங்களை தாக்கல் செய்யாத பொன் மாணிக்கவேல் மீது தமிழக அரசு வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு வாரத்தில் சிலை கடத்தல் வழக்குகள் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் உயா் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஆவணங்களை சரிபாா்த்த பிறகு அதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. இந்தநிலையில் பொன் மாணிக்கவேல் தன்னிடமிருந்த 17,790 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமாரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT