தமிழ்நாடு

குளச்சல் அருகே மின்மாற்றி உடைந்து விழுந்து ஆட்டோ ஓட்டுநா் பலி

16th Dec 2019 06:47 PM

ADVERTISEMENT

நாகா்கோவில்: குளச்சல் அருகே மின்மாற்றி மீது ஆட்டோ மோதியதில் அந்த மின்மாற்றி உடைந்து ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

குமரி மாவட்டம், முட்டத்தைச் சோ்ந்தவா் சகாய ரமேஷ்நாயகம் (33). ஆட்டோ ஓட்டுநா். ஞாயிற்றுக்கிழமை இரவு சகாய ரமேஷ்நாயகம் தனது ஆட்டோவில் குளச்சலுக்கு சென்றாா். இரவு வரை பயணிகளை சவாரிக்கு அழைத்துச் சென்ற அவா், நள்ளிரவு 1.30 மணியளவில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். குளச்சலை அடுத்த கொட்டில்பாடு பகுதியில் வந்தபோது, அங்கு குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் ஆட்டோ சிக்காமல் இருப்பதற்காக வலதுபுறமாக ஆட்டோவை திருப்பி ஓட்டினாா். அப்போது குளச்சல் நோக்கி வந்த காா், ஆட்டோ மீது நேருக்குநோ் மோதியது. இதில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த சிறிய மின்மாற்றி மீது மோதியது. இதில் அந்த மின்மாற்றி உடைந்து ஆட்டோ மீது விழுந்ததில் சகாய ரமேஷ்நாயகம் அதே இடத்தில் உயிரிழந்தாா். காரில் வந்த 4 போ் பலத்த காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், இது குறித்து குளச்சல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குளச்சல் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சகாயரமேஷ்நாயகம் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT