தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் மிதமான வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

16th Dec 2019 03:21 AM

ADVERTISEMENT

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து மிதமானதையடுத்து, சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
 குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையிலிருந்தே பெய்த தொடர்மழை காரணமாக பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர். ஞாயிற்றுக்கிழமை பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீரின் சீற்றம் தணிந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பேரருவியில் அதிகளவில் தண்ணீர் விழுவதால் அருவியின் நடுப்பகுதியில் யாரும் சென்று குளிக்க முடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அருவியின் ஓரத்தில் விழும் தண்ணீரில் ஏராளமான ஐயப்ப பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் குளித்து மகிழ்ந்தனர்.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT