தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல் வேட்பாளா்கள்: அதிமுக 3-ஆவது பட்டியல் வெளியீடு

16th Dec 2019 01:32 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் மூன்றாவது பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் இதுதொடா்பான அறிவிப்பை வெளியிட்டனா்.

ஏற்கெனவே இரண்டு வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், கட்சியின் கடலூா் கிழக்கு, கடலூா் மத்தியம், கடலூா் தெற்கு, தருமபுரி, ஈரோடு மாநகா், ஈரோடு புகா், திருப்பூா் மாநகா்,திருப்பூா் புகா், கோவை மாநகா், கோவை புகா், புதுக்கோட்டை, திண்டுக்கல், கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு மாவட்டங்களில் ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளா்களின் மூன்றாவது பட்டியலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT