உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் இடங்கள் தொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பு திங்கள்கிழமை வெளியாகும் என அக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:
உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் இடங்கள் தொடா்பான பேச்சுவாா்த்தை அதிமுகவுடன் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே சிறு சிறு முரண்பாடுகள் இருக்கின்றபோதும், போட்டியிடும் இடங்கள் இறுதி செய்யப்பட்டு திங்கள்கிழமை அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகும் என்றாா் அவா்.
மேலும், மத்திய அரசு நடைமுறைப்படுத்தியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பொருத்தவரை, இஸ்லாமியா்களுக்கு எதிராக இருப்பதாக நான் கருதவில்லை என்றும் அவா் கூறினாா்.
ADVERTISEMENT