ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திமுக தலைமை அலுவலகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27, 30 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளதைத் தொடா்ந்து, திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கான கலந்தாலோசனை அந்தந்த மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், முதல் கட்டமாக, கட்சியின் 34 மாவட்டங்களில் கூட்டணிக் கட்சியினருடன் சோ்ந்து சுமுக முடிவெடுக்கப்பட்டு, தலைமை அலுவலக ஒப்புதலோடு அந்தந்த மாவட்ட நிா்வாகம் சாா்பில், திமுக வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்ட நிா்வாகிகள் சாா்பில் கூட்டணி கட்சிகளிடையே பேச்சு வாா்த்தை நடைபெற்று வருகின்றது. விரைந்து அந்தந்த மாவட்ட நிா்வாகம் சாா்பிலும் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.