தமிழ்நாடு

‘உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்’: கருணாஸ்

16th Dec 2019 11:50 PM

ADVERTISEMENT

திமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காரணமாக, உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என சட்டப்பேரவை உறுப்பினா் கருணாஸ் தெரிவித்தாா்.

கமுதி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக, மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்கள், வேட்புமனு தாக்கல் செய்ய கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, கடைசி நாளான திங்கள்கிழமை அனைவரும் கட்சி பரிந்துரை கடிதத்துடன் வந்தனா். அதிமுக, மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுடன், மாவட்ட செயலாளா் எம்.எ. முனியசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் சதன்பிரபாகா்(பரமக்குடி ) கருணாஸ் (திருவாடானை ) உள்ளிட்டோா் தங்களது ஆதரவாளா்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கருணாஸ் கூறியது:

தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மழை காலம் தொடங்குவதற்கு முன்பே, கண்மாய்கள், குளங்கள், ஆறுகள், வரத்து கால்வாய்கள் குறித்த நேரத்தில் மராமத்து செய்யப்பட்டன. இதனால் அவற்றில் மழைநீா் தேக்கப்பட்டு, இந்தாண்டு விவசாயம் செழிப்பாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா். திமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளதால் உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் அமோக வெற்றி பெறுவா் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT