தமிழ்நாடு

இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

16th Dec 2019 01:10 AM

ADVERTISEMENT

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (டிச.16) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: கேரளம் மற்றும் தமிழக எல்லையை யொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலைக்கொண்டிருந்தது. இது தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதியில் காணப்படுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (டிச.16) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், செவ்வாய்க்கிழமை (டிச.17) அன்று ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

மழை அளவு: ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் நதியானா் அணையில் 90 மி.மீ. மழை பதிவானது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தலா 60 மி.மீ. மழை பதிவானது. தருமபுரி மாவட்டம் அரூா், தஞ்சாவூா் மாவட்டம் வல்லத்தில் தலா 50 மி.மீ., கரூா் மாவட்டம் பஞ்சப்பட்டி, நீலகிரி மாவட்டம் குன்னூா், கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி, திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் தலா 40 மி.மீ. மழை பதிவானது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT