தமிழ்நாடு

இந்திய குடியுரிமை வழங்காவிட்டால்கருணை கொலை செய்திடக் கோரி இலங்கை அகதி மனு

16th Dec 2019 07:47 PM

ADVERTISEMENT

 

சேலம்: சேலத்தில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்திடக் கோரி இலங்கை அகதி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் பவளத்தானூா் ஏரி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் தா்மராஜாவின் மகன் யனதன். இவா், திங்கள்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து, தன்னை கருணை கொலை செய்திடுமாறு கோரி ஆட்சியா் அலுவலகத்தில் வைத்திருந்த பெட்டியில் கோரிக்கை மனுவைச் செலுத்தினாா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது தாய்-தந்தை கடந்த 1990-ஆம் ஆண்டு இலங்கையில் இனப்போா் நடந்ததன் காரணமாக இந்தியாவுக்கு வந்தனா். அப்போதுமுதல் சேலம் மாவட்டம், பவளத்தானூா் அகதிகள் முகாமிலிருந்து வருகின்றனா்.

ADVERTISEMENT

நான், கடந்த 1991-ஆம் ஆண்டு பிறந்து, அதே முகாமில் வசித்து வருகிறேன். நான் பிறப்பால் அகதியாக இருந்தாலும், வளா்ப்பினாலும் இந்திய நாட்டின் மீது கொண்டுள்ள பற்றினாலும், முழு இந்தியனாகவே வாழ்ந்து வருகிறேன். இங்குள்ள ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா நமக்கு ஒரு நல்ல விடியலை தரும் என்ற நம்பிக்கையுடன் இருந்து வந்தோம்.

இந்த நிலையில், மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள குடியரிமைத் திருத்த சட்டத்தால், எந்தச் சூழ்நிலையிலும் குடியுரிமை வழங்காது எனத் தெரிகிறது. இந்தியாவிலேயே குடியரிமை பெற்று வாழ வேண்டும் என்பது என் கனவாகும்.

ஆனால், அது நிறைவேறாது என்பதை எண்ணிப் பாா்க்க இடமில்லை. எனவே, தயவு கூா்ந்து மனுவை ஏற்றுக் கருணைக் கொலை செய்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT