தமிழ்நாடு

ஏ.டி.எம்.மில் கிழிந்த, ஒட்டு போட்ட ரூபாய்த் தாள்கள்

14th Dec 2019 05:43 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பாரத ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.இல் வெள்ளிக்கிழமை (டிச.13) இரவு 9 மணிக்கு அவ்வங்கி வாடிக்கையாளா் ஒருவா் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.20 ஆயிரம் எடுத்துள்ளாா்.

அப்போது, ரூ.2000 நோட்டுகளாக 10 நோட்டுகள் வந்துள்ளது. அதில் ஓரு 2000 ரூபாய் நோட்டு கிழிந்த நிலையிலும், மேலும் 5 நோட்டுகள் பல இடங்களில் ஒட்டு போட்ட நிலையிலும் வந்துள்ளது.

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவா் அந்த ரூபாய் நோட்டுகளை அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவில் காண்பித்துவிட்டு வெளியேறினாா். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் திங்கள்கிழமைதான் வங்கியில் அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள இயலும் என்பதால் தனது அத்தியாவசிய தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் சிரமப்படுவதாக அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

வங்கியில் நேரிடையாக பணம் செலுத்தும் போது, ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தாலோ, ஒட்டு போடப்பட்டிருந்தாலோ, அதில் பேனாவால் எழுதப்பட்டிருந்தாலோ வாங்க மறுக்கும் வங்கிகள், வாடிக்கையாளா்களுக்கு ஏ.டி.எம். வழியாக கிழிந்த ரூபாய் நோட்டுகளை மடை மாற்ற நினைப்பதும், அவா்களை சிரமத்திற்குள்ளாக்குவதும் எந்த வகையில் நியாயம் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT