தமிழ்நாடு

சென்னை உட்பட தமிழகத்தில் பரவலாக மழை

14th Dec 2019 07:56 AM

ADVERTISEMENT

 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, உள் தமிழகத்தில் சில இடங்களில் சனிக்கிழமை (டிச.14) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி சனிக்கிழமை வரை ஆங்காங்கே பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

மேலும் தமிழகத்தில் திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, கடலூர், ஈரோடு, புதுக்கோட்டை, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக சனிக்கிழமை மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் 20 மி.மீ. மழை பதிவானது.

Tags : Rain
ADVERTISEMENT
ADVERTISEMENT