தமிழ்நாடு

இணைய லாட்டரி விற்பனை: நாகர்கோவிலில் 3 பேர் கைது

14th Dec 2019 08:10 AM

ADVERTISEMENT

 

இணையம் மூலம் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி சீட்டுகளை வாங்கியதில் கடன் சுமைக்கு ஆளான விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, விழுப்புரத்தில் இணையம் வழியே லாட்டரி சீட்டுகளை விற்று வந்த மூா்த்தி, லோகு, நாசா்தீன், முபாரக் உள்பட 14 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில், நாகர்கோவிலில் இணையம் மூலம் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

நூதன முறையில் பணம் பறிக்கும் லாட்டரி ஏஜென்டுகள் மூலம் இவ்வாறு இணைய விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT