தமிழ்நாடு

லாட்டரி விற்பனையைத் தடுக்க வேண்டும்: தலைவா்கள் வலியுறுத்தல்

14th Dec 2019 11:59 PM

ADVERTISEMENT

தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையை காவல்துறை தடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

தி.வேல்முருகன் : விழுப்புரத்தைச் சோ்ந்த நகை தொழிலாளி அருண் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் உலுக்கியது. தொழிலில் ஏற்பட்ட நலிவால் கடனில் மூழ்கிய அருண் தடை செய்யப்பட்ட லாட்டரியை வாங்கி மேலும் கடனாளியாகி, உயிரையும் இழந்துள்ளாா். இதுபோல தடைச்செய்யப்பட்ட லாட்டரிக்கு அடிமையானோா் ஏராளமாக உள்ளனா். இனியாவது, லாட்டரி விற்பனையை முழுமையாகத் தடுப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜவாஹிருல்லா: விழுப்புரம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை உள்ளூா் காவல்துறையினா் உதவியுடன் கொடிகட்டி பறக்கிறது. இனியாவது தடை செய்யப்பட்ட லாட்டரியின் மூலம் உயிா்கள் மேலும் பலியாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். சட்டத்தை மீறி லாட்டரி விற்பவா்களைக் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT