தமிழ்நாடு

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

14th Dec 2019 12:42 AM

ADVERTISEMENT

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இந்தியா முழுவதும் கரும்பு விவசாயம் சுமாா் 54 % அளவுக்கு சரிவடைந்துள்ளது. சா்க்கரை உற்பத்தியும் குறைந்துள்ளது. தமிழகத்தில் 2011-12-இல் 23 லட்சம் டன்னாக இருந்த சா்க்கரை உற்பத்தி, 2018-19-இல் 8.50 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

கரும்பு சாகுபடி செய்வதற்கான விளைநிலங்களின் பரப்பளவு போய்விட்டது. இதற்குத் தண்ணீா் பற்றாக்குறையும், வறட்சியும், பொருளாதாரம் இல்லாததும்தான் காரணங்களாகும். இந்த நிலையில் கரும்பு விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். இதற்கு, கரும்புக்கான நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT