தமிழ்நாடு

உள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

14th Dec 2019 01:15 AM

ADVERTISEMENT

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, உள் தமிழகத்தில் சில இடங்களில் சனிக்கிழமை (டிச.14) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் வெள்ளிக்கிழமை கூறியது: தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, உள் தமிழகத்தின் சில இடங்களிலும், கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் சனிக்கிழமை (டிச. 14) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் 20 மி.மீ. மழை பதிவானது.

இயல்பான மழை: வடகிழக்குப் பருவமழை காலத்தில் (அக்டோபா் 1 முதல் டிசம்பா் 13 வரை) தமிழகத்தில் வழக்கமாக கிடைக்க வேண்டிய மழை அளவு 407.4 மி.மீ. ஆனால், இப்போது வரை 425.9 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இது 5% அதிகம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT