தமிழ்நாடு

புதன்கிழமை இன்று தங்கம் வாங்கலாமா? இதோ விலை நிலவரம்!

11th Dec 2019 01:09 PM

ADVERTISEMENT

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை (டிச. 11) சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.  அதன்படி கடந்த ஒரு மாத காலமாகவே ஏற்ற, இறக்கங்களைக் கண்டு வருகின்றது. 

இந்நிலையில், சென்னையில் இன்று  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.48 குறைந்து ரூ.28,728-க்கு விற்பனையாகிறது. அதேசமயம், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6 குறைந்து ரூ.3,591-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளியின் விலையும் இன்று சிறிதளவு குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.46.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.46,500 ஆகவும் விற்கப்படுகிறது. 

புதன் கிழமை (டிச. 11)​ விலை நிலவரம்

1 கிராம் தங்கம் .................... 3,591

1 பவுன் தங்கம் ..................... 28,728

1 கிராம் வெள்ளி .................. 46.50

1 கிலோ வெள்ளி ................. 46,500


செவ்வாய்க்கிழமை (டிச. 10)​ விலை நிலவரம்

1 கிராம் தங்கம் .................... 3,597

1 பவுன் தங்கம் ..................... 28,776

1 கிராம் வெள்ளி .................. 46.60

1 கிலோ வெள்ளி ................. 46,600

Tags : gold rate
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT