தமிழ்நாடு

உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிமுகவுக்கு மரண அடி: ஸ்டாலின் விமர்சனம்

11th Dec 2019 08:14 PM

ADVERTISEMENT

 

சென்னை: உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிமுகவுக்கு மரண அடி என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கில்,  2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டது.

முன்னதாக தலையில் இடி விழுந்தது போல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு திமுக கூட்டணி மேல் விழுந்துள்ளது  என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருந்தார். 

ADVERTISEMENT

இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிமுகவுக்கு மரண அடி என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் புதன் இரவு செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:

மக்களைச் சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது

தற்போதாவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றி முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை .

உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சம்மட்டி அடி என்றால் அதிமுகவுக்கு அது மரண அடி

தேர்தலை நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் திமுக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை

உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு முறையாக வராத நிலையில் பல்வேறு தகவல்கள் அதிமுக தரப்பால்  பரப்பப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT