தமிழ்நாடு

சாதனைகள் தொடரட்டும்: பி.எஸ்.எல்.வி - சி48 ராக்கெட் பயணத்திற்கு ராமதாஸ் பாராட்டு

11th Dec 2019 04:28 PM

ADVERTISEMENT

 

சென்னை: சாதனைகள் தொடரட்டும் என்று புதனன்று பி.எஸ்.எல்.வி - சி48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பத்து செயற்கைகோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து புதன் மாலை பி.எஸ்.எல்.வி சி 48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

இந்நிலையில் சாதனைகள் தொடரட்டும் என்று புதனன்று பி.எஸ்.எல்.வி - சி48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;

பி.எஸ்.எல்.வி - சி48 ஏவுகலம் இந்தியாவின் ரிசாட் 2பி.ஆர்.1 செயற்கைக் கோளையும், அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகளின் 9 சிறிய செயற்கை கோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. பி.எஸ்.எல்.வி வகை  ஏவுகலத்தின் 50-ஆவது விண்வெளி பயணம் சாதனைப் பயணமாக அமைந்துள்ளது.

பி.எஸ்.எல்.வி - சி48 ஏவுகலத்தின் இன்றைய சாதனைப் பயணம் ஸ்ரீஹரிஹோட்டா ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட 75 ஆவது பயணம் ஆகும். இத்தகைய சாதனைகளுக்கு காரணமான

இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்! சாதனைகள் தொடரட்டும்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT