தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல்: புதன் மாலை முதல்வர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

11th Dec 2019 04:01 PM

ADVERTISEMENT

 

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதன்கிழமை மாலை முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து பணிகளை கவனித்து வந்தது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி திமுக கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் ஆஜராகி வாதிட்ட ப.சிதம்பரம், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களால் மாவட்ட ஊராட்சி தலைவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யப்படாததால், உள்ளாட்சி பதவிகளின் எண்ணிக்கையை கூட மாநில தேர்தல் ஆணையத்தால் கூற முடியவில்லை என வாதாடினார்.

ADVERTISEMENT

அப்போது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி தலைவர்கள் பதவிகளுக்கான தேர்தலை நடத்தினால் உங்களுக்கு சம்மதமா? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இருதரப்பினரின் சம்மதத்திற்குப் பிகு உள்ளாட்சித் தேர்தலை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கான தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் தற்போது நடத்தப்போவதில்லை என தமிழக அரசு முன்வைத்த வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்றம், தமிழகத்தின் 9 புதிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அவகாசத்தை 3 மாதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்  உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதன்கிழமை மாலை முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 05.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT