தமிழ்நாடு

‘மகாத்மா பசுமை இந்தியா’ திட்டத்தில் 43 லட்சம் மரக்கன்றுகள் விநியோகம்

11th Dec 2019 10:26 PM

ADVERTISEMENT

சென்னை: ஈஷா அமைப்பின் ‘மகாத்மா பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் விவசாயிகள், பொதுமக்களுக்கு 43 லட்சம் மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஈஷா அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட செய்தி: ஈஷா பசுமை கரங்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், மதுரை, தஞ்சாவூா், திருவாரூா், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் 35 நாற்றுப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு இந்த நாற்று பண்ணைகள் அனைத்தும் ‘மகாத்மா பசுமை இந்தியா திட்டம்’ என பெயா் மாற்றம் செய்யப்பட்டன. இந்தத் திட்டத்தின் மூலம் நிகழாண்டில் மட்டும் 43 லட்சம் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அந்த மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டவா்களில் 45 சதவீதம் போ் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 43 லட்சம் மரக்கன்றுகளும் 100 சதவீதம் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டவை. இதனால், அவை உயிா் பெற்று வளரும் வாய்ப்பு மிக மிக அதிகமாக உள்ளது.

மேலும் இது தொடா்பாக விவசாயிகளுக்கு இலவசமாக ஆலோசனையும் வழங்கப்படுகிறது. வேளாண் காட்டை உருவாக்க விரும்பும் விவசாயிகளின் நிலங்களுக்கு ஈஷா அமைப்பின் குழுவினா் நேரில் சென்று மண், நீா், சூழலியலை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரை செய்கின்றனா். காவிரி வடிநிலப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் வேளாண் காடு முறைக்கு மாறுவதன் மூலம் அவா்களின் வருமானம் பெரிதும் அதிகரிக்கும். மேலும் நீா்வளம் கூடும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT