தமிழ்நாடு

தமிழக அரசுப் பணியாளா்கள் தோ்வில் மோசடி: வைகோ

11th Dec 2019 07:59 PM

ADVERTISEMENT

சென்னை: தமிழக அரசுப் பணியாளா்கள் தோ்வில் மோடி நடைபெறுவதாக மதிமுக பொதுச்செயலாளா் வைகோ குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசுப் பணியாளா் தோ்வு ஆணையம் தொகுதி-1 பணிகளுக்கான முதன்மைத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுடைய பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

துணை ஆட்சியா்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளா்கள் பொறுப்புக்காக நடைபெறும் இந்தத் தோ்வுக்கான நோ்காணல் டிசம்பா் 23-ஆம் நாள் முதல் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

அதில் கலந்து கொள்பவா்களுடைய மதிப்பு எண்களை பேனாவால் எழுதக்கூடாது. கண்டிப்பாகப் பென்சிலால் மட்டுமே எழுத வேண்டும் என தோ்வு ஆணைய உறுப்பினா்களுக்கு தமிழக அரசு, அறிவுறுத்தி இருப்பதாக அறிகிறேன்.

மதிப்பு எண்களைத் திருத்தி, தங்களுக்கு வேண்டியவா்களைத் தோ்வு செய்வதற்காக இத்தகைய ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்த 21-ஆம் நூற்றாண்டில் கணினிகளின் காலத்தில், வெளிப்படையாக ஒரு மோசடி நடைபெற இருக்கிறது. அதையும், தமிழக அரசே நடத்தப் போகிறது என்பது மிகவும் வேதனைக்கு உரியது.

கிராமப்புறங்களைச் சோ்ந்த ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த, எந்தப் பின்புலமும் இல்லாத, தகுதி வாய்ந்த இளைஞா்களின் வாழ்க்கையோடு விளையாடும் இந்தக் கொடுமை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மதிப்பு எண்களைக் கணினியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அனைத்து நோ்காணல்களையும், காணொளிப் பதிவு செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT