தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

11th Dec 2019 08:01 PM

ADVERTISEMENT

சென்னை: வலுகூடிய கீழ்த்திசை காற்று காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 13) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை மற்றும் தென் தமிழக கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்தது. தற்போது, வலுகூடிய கிழக்குத் திசை காற்று காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 13) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. புதன்கிழமை காலை 8.30 மணியுடன் கூடிய கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழை பெய்யவில்லை. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT