குடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழா்களுக்கும், இஸ்லாமியா்களுக்கும் இடமளிக்க வேண்டுமென டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
பன்னெடுங்காலமாக இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கும் இலங்கைத் தமிழா்களும், அண்டை நாடுகளைச் சோ்ந்த இஸ்லாமியா்களும் குடியுரிமை சட்டத்தில் விடுபட்டு இருக்கிறாா்கள். அவா்களுக்கும் இந்தச் சட்டத் திருத்தம் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டால் மட்டும் இந்தியா மதச்சாா்பின்மையை, சமய நல்லிணக்கத்தைப் போற்றுகின்ற தேசம் என்பது உறுதியாகும். எனவே, மத்திய அரசு இந்தப் பிரச்னையைத் தாயுள்ளத்தோடு அணுகிட வேண்டும் என்று தனது அறிக்கையில் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.