தமிழ்நாடு

கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருள் விளம்பரங்களை ஒழிக்க வேண்டும்: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் 

11th Dec 2019 02:14 PM

ADVERTISEMENT

கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருள் விளம்பரங்களை ஒழிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே டி 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் டிசம்பர் 6 ஆம் நாள் ஹைதராபாத் நகரிலும் டிசம்பர் 8 ஆம் நாள் திருவனந்தபுரம் நகரிலும் நடைபெற்ற போது ‘பான் பஹார், பாபா, சைனி கைனி, கம்லா பசந்த், ஷிகார்’ ஆகிய புகையிலைப் பொருட்கள் விளம்பரம் செய்யப்பட்டதை உங்களது கவனத்துக்கு கொண்டுவருகிறேன். 

'பான் மசாலா' என்கிற போலி பெயரில் இந்த புகையிலை பொருட்களின் விளம்பரங்கள் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தன. தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டன. கிரிக்கெட் விளையாட்டை பின்பற்றும் பல கோடி இளைஞர்களை ஈர்ப்பதற்கு புகையிலைப் பொருள் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தியுள்ளன. 

இந்திய கிரிக்கெட் வாரியம் தனது சமூக பொறுப்பை உணர்ந்து, கிரிக்கெட் போட்டிகள் மூலம் புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துவதில் இருந்து விலகி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அக்கடிதத்தின் நகல்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர், தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு பிரிவின் பொறுப்பு அதிகாரி, இந்திய சுகாதார அமைச்சகத்தின்  புகையிலை கட்டுப்பாட்டுப் பிரிவு இணைச் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT