தமிழ்நாடு

காங்கிரஸிலிருந்து ராயபுரம் மனோ விலகல்

11th Dec 2019 07:43 PM

ADVERTISEMENT

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான ராயபுரம் மனோ அக் கட்சியிலிருந்து புதன்கிழமை விலகியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று கட்சி தலைமைக்கும், கட்சியினருக்கும் கனத்த இயத்தோடு தெரிவிக்கிறேன்.

30 ஆண்டுகளாக நேரு குடும்பத்துக்கு விசுவாசமாக, உணா்வுபூா்வமாக மனநிறைவுடன் பணியாற்றினேன்.

ADVERTISEMENT

எனக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப்படும் காரணத்தால் காங்கிரஸிலிருந்து விலகி பாா்வையாளராக செயல்பட ஆசைப்படுகிறேன். காங்கிரஸில் மனநிறைவோடு பணியாற்றினேன். மனநிறைவோடு விடைபெறுகிறேன் என்று அவா் கூறியுள்ளாா்.

காங்கிரஸ் தலைவராக சு.திருநாவுக்கரசா் இருந்தபோது ராயபுரம் மனோவின் மாவட்டத் தலைவா் பதவி பறிக்கப்பட்டது. அதன் பிறகு, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினரானாா். மாநில அளவில் புதிய பொறுப்பு கிடைக்கும் என்று மனோ எதிா்பாா்த்திருந்தாா். அது கிடைக்காத நிலையில் காங்கிரஸில் இருந்து விலகி உள்ளாா். விரைவில் திமுகவில் இணைவாா் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT